Tuesday, October 4, 2011

மனிதனின் உடல் உருப்பு

இதயம் நுரையீரல் கனையம் சிறுநீரகம் கல்லீரல் மன்னீரல் பித்தப்பைகுடல் 

அன்னகுழாய் சிறுநீர்ப்பை மலப்பை விந்துச்சுரப்பி கருப்பை நரம்புகள் மூலை 



 படிமம்:Diagram of the human heart ta.svgஇதயம் (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் (முதுகெலும்பிகள் உட்பட) காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும்.
முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் சராசரியாக பெண்களில் 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்ஸ்) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்ஸ்) திணிவையும் கொண்டுள்ளது.[1]
சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சிலகணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின்செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது.
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.-------------------------------------------------

                                                                               சிறுநீரகம்

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில்இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.
மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், ஈரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் திரைத்தசைக்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி)அமைந்துள்ளது. ஈரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.

[தொகு]



 நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்குமூச்சுவிடல் என்று பெயர். வாயுப்பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் காபனீரொக்சைட்டு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல்பல்மோ- (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய பல்மொனாரியசு (pulmonarius = "நுரையீரல் தொடர்பான") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற நியுமோ-(pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் ப்நியுமோன் ((πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய அல்வியோல்எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான்வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.

[தொகு]





கல்லீரல் (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலத்தேஇரைப்பைக்கு அருகில் இருக்கும் ஓர் உறுப்பு. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய நீர்மம்சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் தோலுக்கு அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.
கல்லீரல் சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகியகிளைக்கொஜனைச் சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் பித்தநீரை உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களைச் சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.
மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில்இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.

[தொகு]மீளுருவாக்கம்

கல்லீரல், தான் இழந்த (கெட்டுப் போன அல்லது சிதைந்த) திசுக்களைத் தானே மீளுருவாக்ககூடிய ஓர் உள்ளுறுப்பு. இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான ஸ்டெம்செல் (வித்துக்கண்ணறைகள் அல்லது வித்துசெல்கள்) இவ்வுறுப்பில் காணப்படுகின்றது.

[தொகு]கல்லீரலின் செயல்பாடுகள்

மனிதர்களின் உடல்கள் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிக்கிறது. பித்தநீர் சுரக்கவும், இரும்பு மற்றும் உயிர்ச்சத்துக்களைத் தேக்கி வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும் இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும்நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.
கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு உணவைச் செரிக்க உதவும். பித்தநீர் பித்தநீர்ப்பையிலும் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தநீர்ப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும்.

[தொகு]கல்லீரல் 










குடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது அல்லது நமதின் வயிறில் உள்ளது என்றும் கூறலாம். குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது அகும்.குடல் இருவகைகள் உண்டு அவை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகைப்படும்.

[தொகு]குடல் வகைகள்

[தொகு]சிறுகுடல்

உயிரியலில் சிறுகுடல் (small intestine) என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும்,பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல்நடுச்சிறுகுடல்பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:
  • முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
  • நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
  • பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.
சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.

[தொகு]பெருங்குடல்

பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில்இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.னையம் பித்பகுப்புஉடற்கூற்றியல்